search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பாகிஸ்தான் டிரோன்"

    • இந்தியா-பாகிஸ்தான் சர்வதேச எல்லைப் பகுதியில் பாதுகாப்பு படை வீரர்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்,
    • டிரோனில் 3 பாக்கெட்டுகளில் 3 கிலோ ஹெராயின் என்ற போதைப்பொருள் கட்டி வைக்கப்பட்டு இருந்தது தெரிய வந்தது.

    அமிர்தசரஸ்:

    பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் ரத்தன் கூடு பகுதியில் இந்தியா-பாகிஸ்தான் சர்வதேச எல்லைப் பகுதியில் பாதுகாப்பு படை வீரர்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது பாகிஸ்தானில் இருந்து அத்து மீறி நுழைந்த கறுப்பு நிறமுடைய மர்ம டிரோனை இந்திய வீரர்கள் சுட்டுவீழ்த்தினார்கள். அந்த டிரோனில் 3 பாக்கெட்டுகளில் 3 கிலோ ஹெராயின் என்ற போதைப்பொருள் கட்டி வைக்கப்பட்டு இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து அந்த ஹெராயினை கைப்பற்றி விசாரணை நடந்து வருகிறது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ரத்தன் குராட் பகுதியில் சர்வதேச எல்லையை தாண்டி நுழைந்த மற்றொரு பாகிஸ்தான் டிரோனையும் எல்லைப்பாதுகாப்பு படையினர் சுட்டு வீழ்த்தினார்கள்.
    • 2 டிரோன்களை சோதனை செய்த போது அதில் 2 பாக்கெட்டுகளில் 2.6 கிலோ கஞ்சா போன்ற போதைப் பொருட்கள் பொருத்தப்பட்டு இருந்தது தெரியவந்தது.

    பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் மாவட்டம் உதார் தானிவால் சர்வதேச எல்லைப்பகுதியில் எல்லைப்பாதுகாப்பு படை வீரர்கள் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது இந்திய வான் பகுதியில் பாகிஸ்தானில் இருந்து அத்துமீறி நுழைந்து சந்தேகத்திற்கு இடமாக பறந்த டிரோனை அவர்கள் சுட்டுவீழ்த்தினார்கள். இதே மாவட்டத்தில் ரத்தன் குராட் பகுதியில் சர்வதேச எல்லையை தாண்டி நுழைந்த மற்றொரு பாகிஸ்தான் டிரோனையும் எல்லைப்பாதுகாப்பு படையினர் சுட்டு வீழ்த்தினார்கள்.

    கறுப்பு நிறத்திலான இந்த 2 டிரோன்களை சோதனை செய்த போது அதில் 2 பாக்கெட்டுகளில் 2.6 கிலோ கஞ்சா போன்ற போதைப் பொருட்கள் பொருத்தப்பட்டு இருந்தது தெரியவந்தது. அந்த போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

    • சுட்டு வீழ்த்தப்பட்ட டிரோனை இன்று காலையில் எல்லை பகுதியில் இருந்து படை வீரர்கள் கைப்பற்றினர்.
    • டிரோன் சட்டத்திற்கு மாறாக எல்லை பகுதியில் பறந்ததால் சுடப்பட்டதாக எல்லை பாதுகாப்பு படை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அமிர்தசரஸ்:

    பஞ்சாப் மாநிலத்தில் உள்ள சர்வதேச எல்லைக்குள் நுழைந்த பாகிஸ்தான் டிரோன் இந்திய எல்லை பாதுகாப்பு படை வீரர்களால் சுட்டு வீழ்த்தப்பட்டது. ஆள் இல்லாத அந்த 'டிரோன்' பஞ்சாப் தலைநகர் அமிர்தசரஸ் பகுதியில் உள்ள காக்கர் என்ற இடத்தில் இன்று அதிகாலை இறங்கிய போது எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் சுட்டனர்.

    சுட்டு வீழ்த்தப்பட்ட டிரோனை இன்று காலையில் எல்லை பகுதியில் இருந்து படை வீரர்கள் கைப்பற்றினர். அந்த டிரோன் சட்டத்திற்கு மாறாக எல்லை பகுதியில் பறந்ததால் சுடப்பட்டதாக எல்லை பாதுகாப்பு படை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு படை வீரர்கள் அதனை பறிமுதல் செய்து எதற்காக அவை அனுப்பப்பட்டது என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • காஷ்மீர் எல்லையில் இன்று டிரோன் பறந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
    • டிரோன் பறந்த பகுதியில் பாதுகாப்பு படை வீரர்கள் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

    ஜம்மு:

    பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் இந்தியாவுக்கு மிகப்பெரிய சவாலாக இருந்து வருகிறார்கள். சமீபகாலமாக பாகிஸ்தானின் டிரோன்கள் இந்திய எல்லையில் பறந்து போதை பொருள், வெடிபொருள் உள்ளிட்டவற்றை வீசி வருகின்றன. இதற்கு எல்லை பாதுகாப்பு வீரர்கள் பதிலடி கொடுத்து வந்தனர்.

    இந்த நிலையில் காஷ்மீர் எல்லையில் இன்று டிரோன் பறந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. காஷ்மீரின் சர்வதேச எல்லையில் அதிகாலை 4.15 மணியளவில் டிரோன் பறந்தது.

    இந்த டிரோன் பாகிஸ்தானைச் சேர்ந்ததாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

    இதைத் தொடர்ந்து எல்லை பாதுகாப்பு படை (பி.எஸ்.எப்.) வீரரகள் துப்பாக்கியால் சுட்டனர். இதனால் அந்த டிரோன் அங்கிருந்து மாயமானது.

    டிரோன் பறந்த பகுதியில் பாதுகாப்பு படை வீரர்கள் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். ஆயுதம் அல்லது ஏதாவது வெடிபொருளை விட்டு சென்றார்களா? என்று சோதனை மேற்கொள்ளப்பட்டது.

    ×